யாழ். பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சிறப்பு நுண்கலைமானி நெறிக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அகுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுள் குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசே தகுதிகளைக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்து சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான முடிவுத் திகதி கடந்த 21 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மாணவர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து 30.10.2023 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், மேலதிக விவரங்களை www.jfn.ac.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.