பிரித்தானியாவில் ஜுனியர் வைத்தியர்கள் விடுத்துள்ள அறிவிப்பு!
இங்கிலாந்தில் உள்ள ஜூனியர் வைத்தியர்கள் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை நான்கு நாட்கள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்த அறிவிப்பை இன்று (26.07) பிரித்தானிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஊதிய பிரச்சினையை வலியுறுத்தி பிரித்தானிய வைத்தியர்கள் ஐந்தாவது முறையாகவும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு வைத்தியர்கள் பெற்ற ஊதியத்திற்கு சமமான ஊதியத்தை பெற வைத்தியர்கள் போராடி வருகின்றனர். இது தற்போதைய நிலையில், 35 வீதம் அதிகமாகும்.
இருப்பினும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என அறிவித்துள்ளார். இதனையடுத்தே வைத்தியர்கள் போராட்டத்திற்கு தயாராகியுள்ளனர்.





