அதிரடி கிராபிக்ஸ் காட்சிகளுடன் தம்மா டிரைலர் வெளியானது
நடிகை ரஷ்மிகா மந்தனாவின் புதிய படமான தம்மா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
தினேஷ் விஜயன், அமர் கௌசிக் தயாரிப்பில் உருவாகியுள்ள தம்மா படத்தினை ஆதித்யா சர்போட்கர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சத்திய ராஜ், பரேஷ் ராவல், நவாசுதீன் சித்திக், பைசல் மாலிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
டிரைலரில் கிராபிக்ஸ் காட்சிகளும் ரஷ்மிகாவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.21ஆம் தேதி வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)





