கென்யாவில் பதற்ற நிலை : நாடாளுமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள்!
கென்யாவில் சர்ச்சைக்குரிய வரி மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
இதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் நாடாளுமன்றத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் நைரோபியில் குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டதாக துணை மருத்துவர் விவியன் அச்சிஸ்டா தெரிவித்துள்ளார்.
புதிய வரிகளுக்கு எதிராக அரசியல்வாதிகள் வாக்களிக்கக் கோரி செவ்வாய்கிழமை ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர். இருப்பினும் மக்களின் எதிர்புகளுக்கு மத்தியில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் காயமடைந்ததாக மற்றொரு துணை மருத்துவர் கூறினார்.
“ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் நாங்கள் வருகிறோம்” என்று எதிர்ப்பாளர்கள் கூச்சலிடுவதைக் கேட்க முடிந்ததாகவும், மேலும் சில சட்டமியற்றுபவர்கள் ஒரு சுரங்கப்பாதை வழியாக ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.