அதி உச்ச எச்சரிக்கையில் தெஹ்ரான்

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி நாட்டின் ஆயுதப் படைகளை ‘உயர் எச்சரிக்கை’ நிலையில் நிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு தரப்பின் குரல் தரவல்ல அதிகாரியின் தகவலை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
தெஹ்ரானுடனான அதன் அணுசக்தி திட்டம் குறித்த இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் ஈரான் மீது யுத்தம் தொடுப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
சாகோஸ் தீவுகளில் பல குண்டுவீச்சு விமானங்களை குவித்துள்ள டிரம்ப் ஏற்கனவே மத்திய கிழக்குக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களையும் அனுப்பி வைத்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)