இலங்கை செய்தி

சத்துணவை வழங்க லஞ்சம் கோரி தமிழ் பாடசாலை அதிபர் கைது

சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவை வழங்க, பெண்ணொருவரிடமிருந்து லஞ்சம் கோரியதாக கூறப்படும் அதிபர் ஒருவரை, லஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட எஹலியகொட பெருந்தோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எஹலியகொட பெருந்தோட்டத்தில் வசிக்கும் பெண்ணொருவர், குறித்த பாடசாலைக்கான சத்துணவை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக உணவை வழங்க வேண்டும் என்றால், மாதாந்தம் 50,000 ரூபாவை தனக்கு வழங்குமாறு, பாடசாலை அதிபர் குறித்த பெண்ணிடம் கோரியுள்ளார்.

இதன்படி, இந்த அதிபருக்கு கடந்த 05ம் திகதி, குறித்த பெண் 20,000 ரூபாவை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், எஞ்சிய 30,000 ரூபாவை பெற்றுக் கொள்ள முற்பட்ட போதே, குறித்த அதிபர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை அவிசாவளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த லஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!