உலகம்

காசாவுக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட தயாராகும் ட்ரம்ப்

  • October 9, 2025
  • 0 Comments

காசாவுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா சமாதானத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். காசாவுக்கான விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த நாடாக செயற்படும் எகிப்திற்கு, டொனால்ட் ட்ரம்ப் முதலில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, ட்ரம்ப் […]

உலகம்

அமெரிக்காவில் ChatGPTயிடம் பாடசாலை மாணவன் கேட்ட கேள்வியால் அதிர்ச்சியில் அதிகாரிகள்

  • October 9, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பாடசாலையில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது நண்பரை கொலை செய்வது தொடர்பில் ChatGPTயிடம் ஆலோசனை கேட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 13 வயதுடைய மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருக்கும் போது “என் நண்பரை எப்படிக் கொல்வது” என்று OpenAI-யின் ChatGPT செயலிக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். Gaggle எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் உடனடியாக அது தொடர்பில் முறைப்பாடு செய்து, பின்னர் மாணவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். விளையாட்டாக அவ்வாறு செய்ததாக குறித்த […]

ஆசியா

முதுகுவலிக்கு சிகிச்சை என நம்பி 8 உயிருள்ள தவளைகளை விழுங்கிய சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • October 9, 2025
  • 0 Comments

கிழக்கு சீனாவில் பெண் ஒருவர் 8 உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்டு அவர் சுகவீனமடைந்துள்ளார். தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க அவர் இவ்வாறு தவளைகளை விழுங்கியுள்ளார். 82 வயதுடைய ஜாங் என அழைக்கப்படும் பெண்ணே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். அவர் நீண்ட காலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார், மேலும் தவளைகளை உயிருடன் விழுங்குவது வலியைக் குறைக்கும் என்று ஒரு நாட்டுப்புற வைத்தியத்தை நம்பினார். தனது திட்டங்களைப் பற்றி தனது குடும்பத்தினரிடம் […]

உலகம்

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் பலர் பலி

  • October 9, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு மேஜரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தாலிபான் அல்லது தையிப்-இ-தாலிபான் அமைப்புக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தான் இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பழத்தால் நேர்ந்த விபரீதம் – தீயணைப்புப் வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • October 9, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் துரியன் பழத்தின் வாடையை எரிவாயு கசிவென நினைத்து தீயணைப்புப் பிரிவிற்கு அழைத்த விநோத சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் நான்கு முறை தீயணைப்புப் பிரிவிற்கு அழைப்பு வந்தது. விசித்திரமான துர்நாற்றமே அழைப்புகளுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனால் எரிவாயுக் கசிவுக்கான எந்த அறிகுறியும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அந்தக் கட்டடங்களில் எரிவாயு இணைப்புகளும் இல்லை […]

உலகம்

கலிபோர்னியா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை அரசு விடுமுறையாக அறிவிப்பு

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் தீபாவளி பண்டிகையை, அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தீபாவளியை உத்தியோகபூர்வமாக விடுமுறையாக அறிவித்த மூன்றாவது அமெரிக்க மாநிலமாக கலிபோர்னியா மாறியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் AB 268 என்ற சட்டமூலம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது, ஆளுநர் கவின் நியூசம் கையெழுத்திட்டு சட்டமாக அறிவித்துள்ளார். புதிய சட்டத்தின் அடிப்படையில், தீபாவளி நாளில் அரசாங்க ஊழியர்கள், பாடசாலைகள் மற்றும் சமூகக் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. தற்போது கலிபோர்னியாவின் அரசு விடுமுறை நாட்கள் எண்ணிக்கை 11 […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நிர்வாணமாக வெயிலில் இளைப்பாற அனுமதி பெற்ற நபர்

  • May 2, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் Frankfurt நகரிலுள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் உரிமையாளர் அதில் நிர்வாணமாக வெயிலில் இளைப்பாற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கட்டடத்தின் உரிமையாளர் அடிக்கடி நிர்வாணமாக வளாகத்தில் ஓய்வெடுப்பதால் அங்கு வாடகைக்கு இருக்கும் நிறுவனம் ஒன்று அவருக்கு வாடகை தர மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டார் கட்டட உரிமையாளர். விலையுயர்ந்த குடியிருப்பு வட்டாரத்தில் இருக்கும் அந்தக் கட்டடத்தின் மாடிப்படிகளிலிருந்து தோட்டம் வரை அதன் உரிமையாளர் அடிக்கடி நிர்வாணமாக நடந்து சென்றதாக நிறுவனம் புகார் […]

error: Content is protected !!