ஐரோப்பா

போலந்தின் எல்லை மூடல்! ஐரோப்பிய ஒன்றியம் – சீனா வர்த்தகத்தில் பாதிப்பு

  • October 12, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் பெலாரஸுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகள் காரணமாக போலந்து பெலாரஸுடனான தனது எல்லையை மூடியதால் சீனா நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் பொருட்கள் இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கையாக எல்லை மூடப்பட்டதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், முழு பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே எல்லை போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையால் ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வருடாந்திர வர்த்தகம் 25 பில்லியன் யூரோக்கள் குறையக்கூடும் என்று ஐரோப்பிய பொருளாதார ஆய்வாளர்கள் […]

உலகம்

79 வயதான ட்ரம்பின் இதய வயது 65 – மருத்துவர்கள் வெளியிட்ட அறிவிப்பு

  • October 12, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மிகச் சிறந்த உடல்நிலையில் இருப்பதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ட்ரம்பின் உண்மையான வயதைவிட அவரது இதய வயது 14 ஆண்டுகள் குறைவாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அது அவரது தொடர்ச்சியான சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆய்வுக்கூடச் சோதனைகள், நிபுணத்துவ மருத்துவர்கள் மேற்கொண்ட […]

இலங்கை செய்தி

இலங்கையில் முதியோர்களின் பரிதாப நிலை – தம்மை பராமரிக்கக்கோரி தினசரி முறைப்பாடு

  • October 12, 2025
  • 0 Comments

இலங்கையில் தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 0707 89 88 89 எனும் வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண உதவிச் சேவையை தொடர்புகொள்ள முடியும் என செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகளை பரிசீலிப்பதற்காக பராமரிப்பு சபையொன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாடுகளை சமர்ப்பித்தவர்களுடன் விரைவில் பிரதேச செயலக அலுவலகங்களில் இருந்து […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானிய கடவுச்சீட்டில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்

  • October 11, 2025
  • 0 Comments

பிரித்தானிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளின் முன்பக்கத்தில் மன்னர் சார்லஸின் சின்னமே இடம்பெறும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டின் பக்கங்களில் “அவரது மாட்சிமை” என்ற வாசகமும் இடம்பெறும். எனினும் தற்போதைய கடவுச்சீட்டின் அட்டைப்படத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சின்னமே உள்ளது. புதிய கடவுச்சீட்டுகளில் பிரித்தானியாவில் நான்கு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பென் நெவிஸ் (Ben Nevis), லேக் டிஸ்ட்ரிக்ட் (Lake District), த்ரீ […]

உலகம்

தைவானின் நிலைமையை அளவிட சீனா பயன்படுத்தும் புதிய உத்தி

  • October 11, 2025
  • 0 Comments

தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை சீனக் கப்பல்கள் ஒளிபரப்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. போராய்வு நிறுவனமொன்றின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான அறிவாற்றல் ஆக்கிரமிப்புகளுக்கு தாய்வானின் பதிலை மதிப்பீடு செய்யும் முயற்சியாக, சீனா இந்த போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக, பல சீன மீன்பிடிக் கப்பல்கள் தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. […]

உலகம்

அமைதி ஒப்பந்தம் அமுல் – மீண்டும் காஸாவுக்குத் திரும்பும் பாலஸ்தீனர்கள்

  • October 11, 2025
  • 0 Comments

காசாவில் போர் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனர்கள் மீண்டும் அங்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான மக்களே இவ்வாறு தமது சொந்த இடங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்ட உடன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. அது பல பாலஸ்தீனர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. அதே சமயம் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலும் ஹமாஸும் அமைதி உடன்பாட்டை எட்டியிருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே […]

உலகம் செய்தி

ஜப்பானில் 356 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு

  • October 11, 2025
  • 0 Comments

ஜப்பானின் ஒக்கினாவா பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சில நிமிடங்களிலேயே புகை வெளியேறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள், ஒரு இருக்கை பகுதியில் இருந்து எரியும் வாசனை மற்றும் புகை வந்ததாக தெரிவித்தனர். உடனடியாக விமான ஊழியர்கள் சூழ்நிலையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்தனர். அந்த இருக்கையின் கீழ் Power Bank வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அதிக வெப்பம் எடுத்து புகையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவர் தன்னிடம் […]

இலங்கை

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த பெண்களை ஏமாற்றியவர்களுக்கு நேர்ந்த கதி

  • October 10, 2025
  • 0 Comments

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 2 வெளிநாட்டுப் பெண்களிடம் பயண கட்டணத்தை விட அதிகமாக பணம் பறித்ததாகக் கூறப்படும் 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவை சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து 10,000 மற்றும் 30,000 ரூபாய் கப்பம் பெற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் […]

உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஜனாதிபதி ட்ரம்பிற்கு அழைப்பு

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வருமாறு அந்நாட்டின் சபாநாயகர் அமீர் ஓஹானா அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பை நவீன வரலாற்றின் யூத மக்களின் மிகச்சிறந்த நண்பர் என்று அவர் அழைத்துள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேலிய சபாநாயகர் அமீர் ஓஹானா தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிற்கு பின்னர், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மாறவுள்ளார். இஸ்ரேலின் நெருக்கமான […]

இலங்கை

உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை – கடும் நெருக்கடியில் இலங்கை நகை வியாபாரிகள்

  • October 10, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையிலுள்ள நகை வியாபாரிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டொலரை தாண்டியுள்ளது. உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் […]

error: Content is protected !!