இலங்கை

உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை – கடும் நெருக்கடியில் இலங்கை நகை வியாபாரிகள்

  • October 10, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையிலுள்ள நகை வியாபாரிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டொலரை தாண்டியுள்ளது. உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் […]

இலங்கை

விமானத்தில் சைவ உணவு மறுக்கப்பட்டதால் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்!

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, இலங்கை வந்த கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் உயிரிழந்த விடயம் தொடர்பில் குடும்பத்தினர் விமான நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர். கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் அவர் கோரிய சைவ உணவு (Vegetarian Meal) மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கு வேறு உணவு வழங்கப்பட்டுள்ளது. குறித்த உணவு தொண்டையில் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மருத்துவரின் மகனான சூர்யா ஜயவீர கடந்த […]

இலங்கை

இலங்கையில் விந்தணு வங்கியால் ஏற்பட்ட நன்மை – 10 பெண்கள் கர்ப்பம்

  • October 8, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கியால் பாரிய நன்மை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் அஜித் குமார தன்தநாராயன தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விந்தணு வங்கி நிறுவப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆகின்ற நிலையில் நன்மை ஏற்பட்டுள்ளது. இந்த வங்கியில் தானம் செய்பவர்களின் பல நோய்களுக்கான முறையான மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகு, அவர்களின் விந்தணு வங்கியில் சேமிப்பில் வைக்கப்படுவதாக மருத்துவமனை […]

இலங்கை

இலங்கையில் தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம்  30 ஆம் திகதி  முதல் இந்த திட்டம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டையின் விலை சிறிதளவு அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

இலங்கை

இலங்கையில் சீரற்ற காலநிலை – சுகாதாரப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கை

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டில் 39,401 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டெங்குவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என நிபுணர் தெரிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 431 […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை – வட்ஸ்அப்பில் வரும் ஆபத்து

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம், மூலம் நடத்தப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள், பயனர் பெயர் மற்றும் QR குறியீடுகளைக் கொடுத்து மோசடிக்குள் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. பின்னர் இணைய வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பது போன்ற மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் […]

இலங்கை

இலங்கையில் இரண்டு நாட்களில் 8000 ரூபாவால் உயர்ந்த தங்கத்தின் விலை!

  • October 7, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமைக்கு ஏற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் “22 காரட்” ஒரு பவுண்டு தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, இது 283,000 ரூபாவாகக் காணப்பட்டது. இதற்கிடையில், சனிக்கிழமை 306,000 ரூபாவாக இருந்த “24 காரட்” ஒரு […]

இலங்கை

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்!

  • October 6, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகைப்பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 760 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட ஒரு தொகைப்பணமும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய நீலாவணை- வீ.சி.வீதியைச்சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் இதற்கு முன்னரும் இச்சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கல்முனை தலைமையக […]

இலங்கை செய்தி

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதில் நிலவும் சிக்கல்கள்!

  • October 6, 2025
  • 0 Comments

இலங்கையில் மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். அந்த சட்டங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றுவது சிக்கலாக தோன்றினாலும்,  இது தொடர்பான சில சட்டங்களும் விதிமுறைகளும் புதியவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். […]