இலங்கைக்காக ஆஸ்திரேலியாவிடம் உதவி கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர்
டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு […]








