அரசியல் இலங்கை

அரசு பொறுப்புகூற வேண்டும்: சஜித் வலியுறுத்து

  • December 5, 2025
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்கள் அதிகாரிகள் 15 நாட்களாக முன் அறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், அனர்த்தம் ஏற்பட்ட பின்பு வானிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் […]

அரசியல் இலங்கை

இனவாதத்துக்கு சமாதி கட்டுமாறு சஜித் வலியுறுத்து

  • November 26, 2025
  • 0 Comments

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம மற்றும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர். “ அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள், மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி எம்முன்னால் […]

அரசியல் இலங்கை

ரணில், சஜித் அணிகள் இணைவு: காட்டப்பட்டது பச்சைக்கொடி !! 

  • November 24, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக ழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவது தொடர்பான பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இதற்கமைய இரு தரப்பு இணைவு விரைவில் சாத்தியமாகும் என்று ஐக்கிய […]

அரசியல் இலங்கை

தற்போதைய நிலையி்ல் நாமலே எதிர்க்கட்சி தலைவர் – மனோ கணேசன்

  • November 22, 2025
  • 0 Comments

“எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் எதிர்க்கட்சி தலைவர்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனோவின் முகநூல் பதிவு வருமாறு, ” நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்–பிடித்த, படங்களை, போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம். […]

இலங்கை

என்.பி.பி. ஆட்சியை விரட்ட சஜித்துக்கும் அழைப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

கூட்டு எதிரணியின் அடுத்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ 76 வருடகாலம் நாட்டை நாம் நாசமாக்கவில்லை. 1965 இல் ஜே.வி.பி. உதயமான பின்னரே நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எல்லா திட்டங்களையும் அவர்கள் குழப்பினார்கள். எனவே, 76 வருடகால சாபம் நாம் அல்லர். ஜே.வி.பியினர் என்பதை புரிந்துகொள்ள […]

அரசியல் இலங்கை

மாகாணசபைத் தேர்தல்: சஜித் அணி எடுத்துள்ள முடிவு!

  • November 13, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக்குழு கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு கூடியது. இதன்போது வரவு- செலவுத் திட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. அவ்வேளையிலேயே அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் சமரை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழ் […]

அரசியல் இலங்கை

சஜித்தின் செயற்பாடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதிருப்தி

  • November 8, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது இந்திய விஜயத்தின்போது ஓரிரு எதிரணி எம்.பிக்களையேனும் தம்முடன் அழைத்து செல்லாமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் கட்சி தலைமைமீது அவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு உத்தியோகப்பூர்வ – முக்கியத்துவமிக்க வெளிநாட்டு பயணங்களின்போது எதிரணி சார்பில் வெளிவிவகாரம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது அழைத்து சென்றிருக்கலாம் என்பதே அவர்களின் வாதமாக […]

அரசியல் இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • November 8, 2025
  • 0 Comments

மாகாண சபை தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இது தொடர்பில் பிரதமருக்கு இன்று அல்லது நாளை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் […]

அரசியல் இலங்கை

ஹர்ஷவை களமிறக்கும் சஜித்: நாளை நடக்கப்போவது என்ன?

  • November 7, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை (08) ஆரம்பமாகின்றது. எதிரணி தரப்பில் இருந்தே விவாதம் ஆரம்பித்து வைக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர். இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். […]

இலங்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சஜித் எழுப்பிய கேள்வி!

  • October 22, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகரமீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயம். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ‘ வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர தனது அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அவர் மீது துப்பாக்கி சூடு […]

error: Content is protected !!