இலங்கை

இலங்கை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் பதவி விலகினார்!

  • October 11, 2025
  • 0 Comments

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சின் ஊடக செயலாளர் சுரங்க லக்மல் செனவிரத்ன இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாததால் அவர் பதவி விலகியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் நேற்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து பல நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றிய அதிகாரிகள் பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.