அரசியல் இலங்கை செய்தி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க தமிழ்க் கட்சிகள் போர்க்கொடி!

  • December 24, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப்படுவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Dr. Harini Amarasooriya) நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம் நேர்காணலொன்றின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் வழங்கிய பதில் வருமாறு, “ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி (executive presidency) முறைமையை […]

அரசியல் இலங்கை செய்தி

பதவி துறக்க மாட்டேன்: கட்சி மறுசீரமைக்கப்படும்! ஜீவன் அறிவிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் நோக்கம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். அவரால் இன்று (19) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதொகாவின் பொதுச்செயலாளர் பதவியை ஜீவன் தொண்டமான் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன. காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இது தொடர்பான சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் இதொகாவின் […]

அரசியல் இலங்கை செய்தி

மனோவின் யோசனைக்கு ராதா போர்க்கொடி: மலையகத்தைவிட்டு வெளியேற மறுப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

“மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று குடியேறுவதற்கு தயாரில்லை. மலையகம்தான் எங்களின் தாயகம்.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணி வழங்கப்படாவிட்டால், அவர்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதற்கு தயார் என தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் அறிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பதிவொன்றை பகிர்ந்தே சுமந்திரன் மேற்படி அறிவிப்பை விடுத்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய […]

அரசியல் இலங்கை செய்தி

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயார்: மனோ அறிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

“பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமையை பெறுவதற்கு ஆளுங்கட்சி மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை இன்று விடுத்தே மனோ கணேசன் எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார். “இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகிறேன். ஏறக்குறைய பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன. இடைவெளிகளில் […]

அரசியல் இலங்கை செய்தி

மலையக மக்களை வடக்கில் குடியேற்ற தயார்: சுமந்திரன் அறிவிப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

“வடக்கு, கிழக்கில் குடியேற வருமாறு மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்.” இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என்ற மனோ கணேசனின் அறிவித்தலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை […]

error: Content is protected !!