கைது செய்யப்படும் அச்சத்தில் புட்டின் எடுத்த அதிரடி நடவடிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள BRICS உச்சநிலை மாநாட்டிற்கு நேரடியாகச் சென்று கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். அவருக்கு எதிராக அனைத்துலகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. உக்ரேனில் போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் புரிந்த சந்தேகத்தின்பேரில் அவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஓர் உறுப்பு நாடாகும். அதனால் ரஷ்ய அதிபர், தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றால் அங்கு அவர் தடுத்துவைக்கப்படலாம் […]