அரசியல் ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் தென்னாபிரிக்காவில் சந்திப்பு!

  • November 22, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸி ஆகியோர் அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்தே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பற்றி கலந்துரையாப்பட்டது. இந்தோ – பசுபிக் பாதுகாப்பு உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளன. “ ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ{டன் மிகச் […]

அரசியல் இலங்கை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்! 

  • November 22, 2025
  • 0 Comments

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர் என்று […]

இலங்கை

ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்கள் டெல்லி பயணம்!

  • October 24, 2025
  • 0 Comments

இலங்கையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய இரு அரசியல் பிரமுகர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கமைய துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக எதிர்வரும் 27 ஆம் திகதி டெல்லி செல்கின்றார். மும்பையில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, […]

இந்தியா

இந்தியாவில் காற்றின் தரத்தை நிர்வகிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு!

  • October 19, 2025
  • 0 Comments

இந்தியாவில்  காற்றின் தரத்தை நிர்வகிப்பதற்கான வழிகள் குறித்து  அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் வானவேடிக்கைகள், மற்றும் பட்டாசுக்களை வெடிப்பார்கள். இதனால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்தியாவின் தலைநகரில்  காற்றின் தரமானது 300-400 என்ற அளவில் உள்ளது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் காற்று தரக் குறியீடு 300 க்கு மேல் […]

இந்தியா

இந்தியாவில் திறக்கப்படும் பிரித்தானியாவின் கிளைப் பல்கலைக்கழகங்கள்!

  • October 9, 2025
  • 0 Comments

வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் பிரித்தானிய பிரதமர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இதன்போது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, முக்கியமான கனிமங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள […]

தமிழ்நாடு

விஜய்க்கு ஆறுதல் கூறிய பழனிசாமி! ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?

  • October 9, 2025
  • 0 Comments

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் ஜோசப் விஜயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் விஜய் மனமுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கட்சி நிர்வாகிகளை சந்திப்பதையும் விஜய் தொடர்ந்தும் தவிர்த்து வருகிறார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ள நிலையில், அதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வழங்க […]

இந்தியா

இந்தியாவில் மண்ணுக்குள் புதைந்த பேருந்து – தொடரும் மீட்புப் பணி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் மண் சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விபத்து நடந்தபோது பேருந்தில் 30 முதல் 35 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மூன்று பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலையின் பாரிய மண்மேடு பேருந்தின் மீது சரிந்து வீழ்ந்தமையினால் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் […]

error: Content is protected !!