அரசியல் இலங்கை

ஊழல் வாதிகள் தப்ப முடியாது: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்தார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் […]

அரசியல் இலங்கை

ஹர்ஷவை களமிறக்கும் சஜித்: நாளை நடக்கப்போவது என்ன?

  • November 7, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை (08) ஆரம்பமாகின்றது. எதிரணி தரப்பில் இருந்தே விவாதம் ஆரம்பித்து வைக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர். இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். […]

அரசியல் இலங்கை

வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானம் – தமிழரசு கட்சி எச்சரிக்கை

  • November 7, 2025
  • 0 Comments

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானமொன்று எடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்துவதற்கு நேரம் கோரி இருந்தோம். கடந்த ஜுலை மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய பதில் ஜனாதிபதி தரப்பில் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை […]

இலங்கை

வரவு – செலவுத் திட்டம்!! நம்பிக்கை இல்லை என்கிறார் சாணக்கியன் எம்.பி

  • November 7, 2025
  • 0 Comments

வரவு – செலவுத் திட்டம் ஊடாக நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என நம்பமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் இன்று முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம் எனவும் சூளுரைத்திருந்தது. […]

இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டம் நாளை முன்வைப்பு

  • November 6, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நாளை (07) முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுவார். இது 2 ஆம் வாசிப்பாக கருதப்படும். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை மறுதினம் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும். […]

error: Content is protected !!