வாழ்வியல்

சர்க்கரை வள்ளி கிழங்கின் வியக்க வைக்கும் நன்மைகள்…!

ஒரு பக்கம் நோய்கள் வளர்ந்து கொண்டே வந்தாலும் அதற்கான தீர்வும் நம்மைச் சுற்றியே இருக்கும்.

நாம்தான் அதைத் தேடுவதில்லை, அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கு நம் உடம்பில் என்னென்ன நன்மைகள் செய்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இயற்கையின் குளுக்கோஸ் இந்த கிழங்கு, ஏனென்றால் குளுக்கோஸ் போட்டால் நம் உடலில் உடனே தெம்பு வந்துவிடும். அதுபோல் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்ட உடனே உடனடியாக எனர்ஜியை இது கொடுக்கிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. "இதுல" மட்டும் ஜாக்ரதையா இருங்க.. சக்கரை  வள்ளிக்கிழங்கு காட்டும் ஆச்சரியம் | Health Benefits of Sugarcane Yams Do  you know Sweet Potato is ...

உலக அளவில் டாப் 10 உணவுகளில் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ஏழாவது இடம் பெற்றுள்ளது. அந்த அளவுக்கு மருத்துவ குணம் உள்ளது. புகை பிடித்து அதன் பின் விளைவால் ஏற்படும் நுரையீரல் புண் உள்ளவர்களுக்கு இந்தக் கிழங்கு ஒரு சிறந்த தீர்வாகும். பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருக்கும் ஆனால் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் மட்டும் மாவுச்சத்துக்கு இணையாக நார்ச்சத்தும் உள்ளது. கொழுப்பு மிக குறைவான அளவில் உள்ளது.

Sweet Potatoes For Weight Loss: 12 Reasons Why You Must Include This  Superfood In Your Diet

மேலும் விட்டமின் ஏ,பி சத்துக்கள் ,விட்டமின் டி போன்றவை கொட்டி கிடைக்கின்றன. குறிப்பாக விட்டமின் பி5 சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து குறைவினால் முகப்பரு பொடுகு மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்படும் பாத எரிச்சல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களான படர்தாமரை, மூட்டு வலி போன்றவை ஏற்படும். அவற்றை போக்க இந்த சக்கர வள்ளி கிழங்கை அதன் பருவ காலத்தில் கிடைக்கும்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Japanese Double Baked Sweet Potato Recipe - Japan Centre

இது நம் உணவில் உள்ள நச்சுக்களையும் உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றும் தன்மையை கொண்டது. வாயிலிருந்து ஆசனவாய் வரை ஏற்படக்கூடிய புற்று நோய்களை குணப்படுத்தும். மேலும் கேன்சர் செல்களை அளிக்க செய்யும். இதில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தம், மனசோர்வு, உள் உறுப்புகளின் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும். விட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிக அளவில் கிடைக்கும். அந்த சூரிய ஒளி ஒரு சிலருக்கு அதன் ஒளி அலர்ஜியை ஏற்படுத்தும் அந்த பற்றாக்குறையை போக்க இந்தக் கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்.

How to Cook Sweet Potatoes - Great British Chefs

குளிர்காலங்களில் தோலில் பனி பற்று ஏற்படுவதை தடுக்கும். ஒரு வயது முதல் 80 வயது வரை தாராளமாக இந்த கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை மதியம் இவற்றிற்கு இடைப்பட்ட நேரங்களில் அல்லது மதியம் இரவு உணவு இடைவேளையில் 100 கிராம் அளவில் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கிழங்கை அதிகமாக எடுத்துக் கொண்டால் வாய்வு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.ஆகவே வாகனங்களை நாம் எப்படி சர்வீஸ் செய்கிறோமோ அதேபோல் நம் உடலையும் சர்வீஸ் செய்ய இந்தக் கிழங்கு போதுமானது. உடலில் தேங்கியுள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றும் . அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் கிழங்கு வகைகளை உணவில் சேர்த்து பயனடைவோம்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான