ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு தனது உரையை சற்று முன்னர் ஆரம்பித்த போது கொழும்பில் வாணவேடிக்கைகள் ஒலித்தன.
தேர்தல்களை முன்னிட்டு இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இந்த உரையை ஆற்றியுள்ளார்.
கைச்சாத்திடப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின் படி இலங்கை 2028ஆம் ஆண்டு வரை கடனைத் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று ஆற்றிய விசேட உரையின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
2048ஆம் ஆண்டு வரை கடனை மீளச் செலுத்துவதற்கு சலுகையுடன் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தீர்வற்று வங்குரோத்து நிலையில் இருந்த இலங்கை, இரண்டு வருடங்களில் மீண்டுள்ளது. உலகில் இவ்வாறு ஒரு சில நாடுகளே குறுங்காலத்தில் மீண்டுள்ளன.
பொருளாதாரத்தில் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கையாண்ட அதே வியூகங்கள் மூலம் இலங்கை 2048ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.