ஸ்பெயினில் கறுப்பு நிற பூனைகளை தத்தெடுப்பதற்கு தடை!

ஸ்பெயினில் (Spani) கறுப்பு நிறப் பூனைகளைத் தத்தெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெர்ராசாவில் (Terrassa) ஹலோவீன் (Halloween) காலத்தில் இடம்பெறும் தீய நிகழ்வுகளை தடுக்கும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூனைகளை வளர்ப்பது அல்லது தத்தெடுப்பதற்கான அனைத்து கோரிக்கைகளும் அக்டோபர் 6 முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படும் என உள்ளூர் விலங்கு நல சேவை தெரிவித்துள்ளது.
டெர்ராசா (Terrassa) நகர சபை, நகரத்தில் கறுப்பு பூனைகள் மீது கொடுமை நடந்ததாக எந்த பதிவும் இல்லை என்றும், இருப்பினும் மற்ற பகுதிகளில் சம்பவங்கள் நடந்துள்ளதால், விலங்கு நலக் குழுக்களின் எச்சரிக்கைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
கறுப்பு பூனைகள் பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தில் துரதிர்ஷ்டமாகக் கருதப்படுவதால் அவற்றை தீய நிகழ்வுகளுக்கு மக்கள் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் ஜப்பான் (Japan), எகிப்து (Egypt) உட்பட பல கலாச்சாரங்கள் அவற்றை செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் சின்னங்களாகப் பார்க்கின்றன.