பொழுதுபோக்கு

எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி பலத்த அடி வாங்கிய படங்கள்…

இந்த வாரம் திரையரங்குகளில் சில படங்கள் வெளியானது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் ஜெயம் ரவியின் இறைவன் படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தது.

இதில் குறிப்பாக சந்திரமுகி 2 படத்தை தான் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திரமுகி படம் வெளியாகி தியேட்டரில் அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்தது. இப்போது வரை அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருந்த நிலையில் இப்போது ரஜினியின் இமேஜை கெடுக்கும் படியாக சந்திரமுகி 2 உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அதாவது வேட்டையனாக ரஜினி மாஸ் சம்பவம் செய்திருப்பார். ஆனால் லாரன்ஸ் இடமும் அதை எதிர்பார்த்த நிலையில் சொதப்பிவிட்டார் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் இந்த படம் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் கிட்டத்தட்ட 7.5 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் இரண்டாவது நாளில் மிகப்பெரிய சருக்களை சந்தித்திருக்கிறது.

அதாவது சந்திரமுகி 2 படம் இரண்டாவது நாள் முடிவில் 4.5 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. மேலும் படத்திற்கு தொடர்ந்து மோசமான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வரும் வாரங்களில் வசூல் மிகக் குறையும் என கூறப்படுகிறது. அடுத்ததாக ஜெயம் ரவியின் இறைவன் படம் ஏ சர்டிபிகேட் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கிறது.

இதுவரை வெளியான சீரியல் கில்லர் படம் போல இறைவன் படமும் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 2.50 கோடி மட்டுமே இறைவன் படம் வசூல் செய்திருந்தது. இரண்டாவது நாளில் இன்னும் சற்று குறைந்து 1.75 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆக மொத்தம் இதுவரை 4.25 கோடி மட்டுமே இறைவன் படம் வசூல் செய்திருக்கிறது.

ஜெயம் ரவி இந்த படத்தை பெரிதும் நம்பிய நிலையில் இப்போது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல் சந்திரமுகி 2 படத்தை நம்பி லைக்காவும் பல கோடி முதலீடு செய்திருந்தது. இப்போது போட்ட பட்ஜெட்டை எடுக்குமா என்ற நிலையில் தான் சந்திரமுகி 2 படமும் இருக்கிறது. ஆகையால் லாரன்ஸ் மற்றும் ஜெயம் ரவி இருவருக்குமே இந்த படங்கள் காலை வாரி விட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்