உலகை உலுக்கும் வெப்பம் – எச்சரிக்கை வெளியிட்ட விஞ்ஞானிகள்
உலகின் பல பகுதிகளில் இம்மாதம் உலுக்கிய வெப்பத்திற்கு மனிதர்களே காரணம் என நீண்ட ஆய்வின் பின்னர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதர்கள் உண்டாக்கிய பருவநிலை மாற்றம் இல்லாவிட்டால் பூமியில் இத்தகைய கடும்வெப்பம் ஏற்படும் சாத்தியம் மிகமிகக் குறைவு என்று அவர்கள் கூறினர்.
ஐரோப்பாவில் வெப்பம் 2.5 பாகை செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் வெப்பம் 2 பாகை செல்சியஸ் உயர்ந்தது.
சீனாவில் வரலாறு காணாத வெப்ப உயர்வுக்கு உலகவெப்பமே முக்கியக் காரணமாகும். கடும்வெப்பத்தால் உலகின் பல பகுதிகளில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காட்டுத்தீயும்
பயிர்களும் கால்நடைகளும் பெரிய அளவில் சேதம் அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
(Visited 24 times, 1 visits today)





