ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் படைப்புகளுக்கு பெற்றோரிடம் நிதி கோரிய பாடசாலை!
ஆஸ்திரேலியாவில் பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஒரு மழலையர் பள்ளி, குழந்தைகளின் கலைப்படைப்புக்கு A$2,200 செலுத்துமாறு பெற்றோரிடம் கோரியுள்ளது.
இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அதன் முடிவைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிரிஸ்பேனில் அமைந்துள்ள கிரெய்க்ஸ்லியா மழலையர் பள்ளி, இந்த மாத தொடக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அவ் அறிவிப்பில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கலைப்படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
குழந்தைகளுக்கான சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத் தொகையான AU$40,000ஐ (£19,600) திருப்பிச் செலுத்த உதவும் என்று குழந்தை பராமரிப்பு நிறுவனம் கூறியது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு பெற்றோர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





