வந்தது வெள்ளி…“சரிகமப” போருக்கு தயாரான போட்டியாளர்கள்…
 
																																		உலகில் இசையை பிடிக்காமல் யாரும் இருக்கமாட்டார்கள். மீளாத்துயரில் இருக்கும் ஒருவரையும் மீட்டெடுக்கும் சக்தி இசைக்கு உண்டு.
அலைப்பாயும் ஒருவரது சிந்தனையை கட்டுக்குள் வைத்திருக்கும் திறனும் இந்த இசைக்கு உண்டு. இன்றைய காலக்கட்டத்தில் இசையில் நாட்டமுள்ளவர்கள் அதிகம் உள்ளனர்.
இவர்களுக்காக பல்வேறு மேடைகள் இருக்கின்றன. அந்த வகையில் உலகத்தமிழர்களுக்காக பல தமிழ் சேனல்கள் மேடைகளை உருவாக்கியுள்ளனர்.
அந்த வகையில் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி பெயர் போனது. ஜீ தமிழ் என்றாலே சரிகமப என்ற அளவுக்கு ரீச் ஆகி விட்டது.
இந்த மேடையில் தங்களை நிரூபித்து வெற்றி பெற்றவர்களும் உள்ளனர். மகுடம் சூடாமலேயே வெற்றி பெற்றவர்களும் உள்ளனர். சினிமாக்களில் பாட வாய்ப்பு, பிரபலங்களுடன் பாட வாய்ப்பு என பல கதவுகள் இவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சி இவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் ரீச் ஆகுவதற்கு முக்கிய காரணம் சிறப்பாக தொகுத்து வழங்கும் அர்ச்சனாவையும், நடுநிலையான தீர்ப்பை வழங்கும் நடுவர்களையும், பாடல்களுக்கு பின்னணி இசையை கொடுக்கும் வாத்தியக்காரர்களையும் சாரும்.
அந்த வகையில் வெள்ளிக்கழமை என்றாலே சனி ஞாயிறு போட்டிகளுக்கான புரோமோக்கள் வந்துவிடும். அன்றைய நாள் முழுவதும் ஜீ சரிகமப வின் ஆதிக்கமாகவே இருக்கும்.
வார இறுதிக்கான புரோமே தற்போது வெளியாகி உள்ளது. அதில் அனைத்து போட்டியாயர்களும் தங்களது திறமைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை வந்த புரோமோக்களில் அனைவரது பர்வோமன்ஸூம் வந்துவிட்டன. இலங்கை இளைஞன் சபேசனின் புரோமோ மட்டும் இதுவரை வரவில்லை. அனைவரும் சபேசனின் புரோமோவை போடுங்கள் என கமென்டில் கூறி வருகின்றனர்.
 
        



 
                         
                            
