கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த சாலை விபத்து; 4 பேர் பலி, 16 பேர் காயம்
கிழக்கு ஆப்கானிஸ்தானின் கஸ்னி(Ghazni) மாகாணத்தில் ஹிலக்ஸ்(Hilux) வாகனம் மீது லொரி மோதியதில் குறைந்தது நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகமான TOLOnews இன்று (26) மாகாண அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகர் காபூலை தெற்கு காந்தஹார்(Kandahar) மாகாணத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ள கராபாக் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து நிகழ்ந்தமைக்கு பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 4 times, 4 visits today)





