22ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரவீனா… வைரலாகும் படங்கள்

சின்னத்திரையில் மக்கள் மனதை கவர்ந்த நடிகைகளில் ரவீனாவுக்கும் ஒரு தனி இடம் உண்டு.
இவர் சிறு வயது முதல் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றார். மேலும் விஜய்யின் ஜில்லா படத்தில் நடித்துள்ளார்.
இவருக்கு விஜய்யின் மகனுடனும் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது.
என்னதான் படங்கள், சின்னித்திரை நாடகங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழ் தேடித்தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌனராகம் – 2 சீரியல் தான். இன்றளவு ரவீனாவை சக்தியாக கொண்டாடுகின்றார்கள்.
இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சிந்து பைரவி தொடரில் கமிட்டானவர் பின் சில காரணங்களால் அதிலிருந்து வெளியேறினார்.
இதனால் அவருக்கு சின்னத்திரையில் நடிக்க பிரச்சினை ஏற்பட்டது. இப்போது அவர் அதிகமாக போட்டோ ஷுட்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
இந்த நிலையில் நடிகை ரவீனா தாஹா தனது 22வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதற்கான போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் ரவீனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.