வங்கதேசத்தில் தீக்கிரையாக்கப்பட்ட அரசியல் தலைவரின் வீடு – சிறுமி பலி!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவர் பெலால் ஹொசைனின் (Belal Hossain) வீட்டை, ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடியிருப்பாளர்கள் இரவு உணவிற்குப் பின் படுக்கைக்குச் சென்ற பிறகு, வீட்டின் கதவுகள் வெளியில் பூட்டப்பட்டிருந்ததாகவும், இன்று (21) அதிகாலை 2 மணியளவில் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெலால் ஹொசைனின் (Belal Hossain) ஏழு வயது மகள் உயிரிழந்துள்ளார். அவரும் அவரது இரண்டு மகள்களும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மகள்களும் மேலதிக சிகிச்சைக்காக நாட்டின் தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





