டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் தளத்தில் இணைந்த பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துள்ளார்.
“ட்ரூத் சோஷியலில் இருப்பதில் மகிழ்ச்சி! இங்குள்ள அனைத்து உணர்ச்சிமிக்க குரல்களுடனும் தொடர்பு கொள்ளவும், வரும் காலங்களில் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று இந்திய பிரதமர் தெரிவித்தார்
முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டரும் கணினி விஞ்ஞானியுமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் நடத்திய ட்ரூத் சோஷியலில் உரையாடலின் வீடியோ இணைப்பை டிரம்ப் பகிர்ந்து கொண்டார்.
டிரம்பிற்கு நன்றி தெரிவித்த மோடி, “எனது நண்பர், ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றி. எனது வாழ்க்கை பயணம், இந்தியாவின் நாகரிகக் கண்ணோட்டம், உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளை நான் உள்ளடக்கியுள்ளேன்” என்றார்.