வெளியானது மம்மூட்டி – மோகன்லால் பட டீசர்
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பேட்ரியாட் (patriot) என்கிற திரைப்படத்தில்நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன், நயன்தாரா, ரேவதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்திய அரசியல் – ஆக்சன் திரைப்படமாக இது உருவாகிவரும் நிலையில், இதன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
இதில், மிகச்சிறந்த இந்திய துரோகியா இல்லை பக்தனா என்கிற கேள்விக்கு இடையே மம்மூட்டி, மோகன்லால் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது, மலையாள சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இதுதான் என்பதால் வெளியீட்டிற்காக பலரும் காத்திருக்கின்றனர்.





