முதல்நாளில் 154 கோடியை தட்டித் தூக்கிய ஓஜி
இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாணின் “தே கால் ஹிம் ஓஜி” திரைப்படம் முதல்நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இந்தப் படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியது.
ஆந்திர துணை முதல்வரானதற்கு பிறகு பவன் கல்யாண் நடிப்பில் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ’தே கால் ஹிம் ஓஜி’ படத்தில் நடித்திருந்தார்.
ஓஜிக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் அதன் மேக்கிங் ரீதியாகவும் ஆக்சன் காட்சிகளினாலும் இப்படம் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் படம் முதல் நாளிலேயே ரூ.154 கோடி வசூலித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)





