பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா இன்று உடலநலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1980களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலாவும் ஒருவர்.
ஆகாய கங்கை படத்தில் ஆரம்பித்து 2002ல் வெளியான நைனா படம் வரை 20க்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளதுடன் , 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இன்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மனோபாலாவின் திடீர் மரணம் திரயுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறி வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)