குட் நியூஸ் சொன்ன சினேகன் கன்னிகா ஜோடி
தஞ்சாவூரில் ஏழ்மையான குடும்பத்தில் 8வது மகனாக பிறந்தவர் தான் சினேகன். சினிமா மீது கொண்ட ஆசையின் காரணமாக சென்னை வந்து, பல ஆண்டுகள் பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவின் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அதன் பிறகு ஒரு மாத இதழில் கவிதை தொகுப்புகள் மற்றும் கதைகளை எழுத துவங்கிய சினேகனை படங்களுக்கு பாடல்கள் எழுதுமாறு ஊக்கப்படுத்தியது மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான்.
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் உருவான புத்தம் புது பூவே என்ற படத்தில் தான் முதல் முதலாக பாடலாசிரியராக அறிமுகமானார் சினேகன். ஆனால் அந்த படம் இறுதி வரை வெளியாகாமல் போனது, அவருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு சுமார் 3 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கடந்த 2000மவது ஆண்டு வெளியான “மனு நீதி” என்ற திரைப்படத்தின் மூலம், தேவா இசையில் தான் பாடலாசிரியராக அறிமுகனார் சினேகன்.
அன்று துவங்கி இன்று வரை இந்த 24 ஆண்டு கால திரை பயணத்தில் சுமார் 500 படங்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் சினேகன்.
இந்த நிலையில், சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடி வந்த “நாதஸ்வரம்” என்ற நாடகத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் கன்னிகா. சின்னத்திரை மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற அவர் கடந்த 2021ம் ஆண்டு சினேகனை திருமணம் செய்துகொண்டார்.
தனது சமூக ஊடக கணக்குகளில் மிகவும் பிசியாக உள்ள கன்னிகா, தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணம் குறித்த ஒரு சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அவர்.
தங்களுடைய திருமணமதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், “நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவிட்டது இன்னொரு உயிர் தான்” என்று கூறி சினேகா மற்றும் கன்னிகாவை வாழ்த்தியதை நினைவுகூர்ந்து தான் கர்பமாக இருப்பதாய் அறிவித்துள்ளார். அவருடைய ரசிகர்களும், திரை பிரபலங்களும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.