100 கோடியை வசூலித்தது மோகன்லாலின் ஹிருதயபூர்வம்
இயக்குநர் சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் ஓணம் ஸ்பெஷலாக, நடிகர் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியானது.
தற்போது இந்த படம் 100 கோடியைத் தாண்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
விமர்சன ரீதியாக இந்தப் படம் வரவேற்பைப் பெற்றாலும் லோகா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றினால் இதன் வசூல் பாதித்தது.
சமீபத்தில் மோகன்லாலுக்கு மத்திய அரசின் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதனை அடுத்து இந்தப் படம் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)





