கமுருதீன் பிக் பாஸ் சென்றதால் மகாநதி சீரியலில் ஏற்பட்ட மாற்றம்

பிக் பாஸ் என்றாலே அதில் சின்னத்திரை நடிகர்கள், வெள்ளித்திரை நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கன்டன் கிரியேட்டர்ஸ், பாடகர்கள், இயக்குனர்கள், என ஏராளமான துறைகளில் இருந்து கலந்துகொள்வது வழக்கம்.
இம்முறை விஜய் டிவியில் ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ் தமிழ் – சீசன் 9 இலும் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் திரும்பி வெளியில் வருவதற்கு எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. அது மக்களின் கைகளிலேயே உள்ளது.
இந்த நிலையில் சின்னத்திரை தொடரிலிருந்து யாரேனும் ஒருவர் பிக்பாஸ் சென்றால் அந்த தொடருக்கு பேரிழப்பாகவே இருக்கும்.
ஒன்று அந்த கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒருவர் நடிக்க வருவார், அல்லது அந்த கதாப்பாத்திரத்தையே முடித்து விடுவார்கள்.
அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாகும்.
இதில் குமரன் பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் கமுருதீன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால், அந்தத் தொடரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கமுருதீன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால், மகாநதியில் இருந்த குமரன் பாத்திரம், மலேசியா செல்வதாகக் கதை மாற்றப்பட்டுள்ளது.
கமுருதீனுக்கு பதிலாக, புதிய நடிகர் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதையில் திடீர் திருப்பமாக கமுருதீன் மலேசியா செல்வதாக மாற்றப்பட்டுள்ளது.