உக்ரைனில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிகுண்டினால் உயிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
உக்ரைனில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிகுண்டு எச்சங்களால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 2022 இல் 608 ஆக உயர்ந்துள்ளது,
இது முந்தைய ஆண்டு 58 ஆக இருந்தது.
கண்ணிவெடி கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு 49 மாநிலங்கள் மற்றும் மற்ற இரண்டு பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் போரின் வெடிக்கும் எச்சங்களால் 4,710 பேர் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர் என்று தெரிவித்த்துள்ளது.





