அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள பெண்! கமலா ஹாரிஸ் வெளியிட்ட தகவல்
அமெரிக்காவின் அரசியல் செயற்பாட்டில் இருந்து தான் விலகவில்லை எனவும், மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றவுள்ளதாகவும் முன்னாள் பிரதி ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்காவில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிடவுள்ளமை வெளிப்படுத்துவதாக BBC சுட்டிக்காட்டியுள்ளன.
BBC ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தனது அரசியல் செயற்பாடு தொடர்பான தகவலை கமலா ஹாரிஸ் வெளியிட்டிருந்தார்.
இதன்போது அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்குத் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் கமலா ஹாரிஸ் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பெண் ஒருவர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக, கமலா ஹாரிஸ் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் மீண்டும் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





