பிக் பாஸ் தமிழ் சீசன் – 9 வீட்டில் ஒரு அகோரி… இனி என்ன நடக்கப்போகுதோ?
நாட்டுப்புற கலைஞரான கலையரசன் பலருக்கும் நாட்டுப்புற கலைகளை கற்று கொடுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அகோரியாக மாறினார்.
காசிக்கு சென்று அகோரிகளுடன் வாழ்ந்து. டீ, எலும்புகளை மட்டுமே சாப்பிட்டு வந்ததாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
வீட்டில் பூஜை செய்து சர்ச்சைகளை ஏற்படுத்தினார். யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து அதிகளவில் டிரெண்டானார். ஒரு கட்டத்தில் கலையரசனின் மனைவி பிரகாவிற்கும் கலையரசனுக்கும் இடையில் பெரிய பூகம்பம் வெடித்தது.
இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் புகார் அளித்தனர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் கலையரசனின் அப்பா இறந்துவிட்டார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது கலையரசன் மனைவியுடன் இணைந்து வாழ்கின்றார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கலையரசனும் ஒருவராக வந்துள்ளார். நிகழ்ச்சிக்கு அவருடன் அவரது மனைவி பிரகாவும் வந்திருந்தார். அப்போது அவர் புகுந்து விளையாடு என்று சொல்லவே அப்புறம் என்ன அனுமதி கிடைத்துவிட்டது இனி விளையாட வேண்டியது தான் என்றார்.
அதற்கு விஜய் சேதுபதி எத்தனை வயதாகிறது என்று கேட்க, தனக்கு 25 வயதாகிறது என்றார். 25 வயதிலேயே ஆடாத ஆட்டமா? நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பிறகு இனி பிக் பாஸ் கலையரசன் என்றே அழைக்கப்படுவீர்கள் என்று வாழ்த்தி அவரை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் எடுத்த ஊதா மற்றும் சிகப்பு நிற பேட்ஜ்களின் அடிப்படையில் வீடு இரண்டாக பிரிந்தது. இதில் குறைவான எண்ணிக்கை கொண்ட போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் டீலக்ஸ் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், நாளை பிக் பாஸ் கொடுக்கும் வரையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாத்ரூம் ஏரியாவைத் தவிர மற்ற இடங்களில் சிண்டேக்ஸ் டேங்கில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் போட்டியாளர்களுக்கு 2 பிராமிஸ் வழங்கப்பட்டது. அதன்படி போட்டி கடுமையாக இருக்கும். சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எல்லா நேரமும் விழிப்புடன் இருந்து சவால்களை சமாளித்து பெஸ்டை கொடுத்து முன்னேறி செல்ல வேண்டும். 2ஆவது பிராமிஸ் எவ்வளவோ பார்த்துவிட்டோம் இதை சமாளிக்க முடியாதா என்ற எண்ணம் கொண்ட ஒருவராகத்தான் வெளியில் செல்வீர்கள் என்று பிக் பாஸ் கூறினார்.






