காசாவை மீள நிர்மாணிக்க பல தசாப்தங்கள் ஆகும் – யார் நிதியளிப்பார்கள்?
போரினால் அழிவுற்றுள்ள காசாவை மீளவும் கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் ஆகலாம் என புரூக்கிங்ஸ் (Brookings) நிறுவனத்தின் நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், காசா பகுதி பாலஸ்தீன மக்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரி ஜாகோ சிலியர்ஸ் (Jaco Cilliers) காசா பகுதியில் இருந்து சுமார் 81,000 டன் இடிபாடுகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், புனரமைப்பு எப்போது தொடங்கும், யார் இந்த முயற்சிக்கு நிதியளிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று புரூக்கிங்ஸ் (Brookings) நிறுவனத்தின் நிபுணர் ஹேடி அம்ர் (Hady Amr) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் செயற்கைக்கோள் மையத்தின் தரவுகளின்படி, காசா நகரில் மட்டும் சுமார் 83% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றில் சுமார் 40% கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டு வருடகால போரின் போது பாடசாலைகள், மருத்துவமனைகள், நீர் மற்றும் மின்சார உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புனரமைப்பு பணிகள் நடைபெறும் வரை மக்கள் தொடர்ந்து உயிர்வாழ்வது கூட நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருக்கும்” என்று ஹேடி அம்ர் (Hady Amr) தெரிவித்துள்ளார்.





