ஈரானிடமிருந்து தொடர் தாக்குதல்கள் இடம்பெறலாம் – இஸ்ரேலியப் பிரதமர் எச்சரிக்கை
ஈரான் மேலும் தொடர் தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் இன்னமும் முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்துக்காக போராடுமாறு ஈரானிய மக்களை நெதன்யாகுகேட்டுக்கொண்டார்.
தெஹ்ரான் இதற்கு முன்னர் இவ்வளவு வலுவிழந்திருக்கவில்லை என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் ராணுவத் தளபதிகளும் மூத்த அணுசக்தி அறிவியலாளர்களும் உயிரிழந்ததனை அவர் சுட்டினார்.





