முக்கிய செய்திகள்

இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தி காசாவின் பெரிய பகுதிகளை கைப்பற்ற உள்ளது; இஸ்ரேல்

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாக இஸ்ரேல் புதன்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அது திட்டமிட்டுள்ளது. அதே நேரம் அதிக அளவிலான மக்களை அப்பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றி வருகிறது.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் காஸா மக்களை இஸ்ரேல் தலைவர்கள் பாராட்டியும் ஊக்குவித்தும் வருகின்றனர்.

“சண்டை நடக்கும் இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும். காஸா மக்கள் ஹமாஸ் அமைப்பை எதிர்க்க வேண்டும், பிணைக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும். அதுதான் போரை முடிவுக்குக் கொண்டுவரும்,” என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா, கான் யூனிஸ் பகுதியில் வாழும் மக்களைக் கடலோரப் பகுதியான அல்மாவாசிக்குச் செல்ல இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 59 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

(Visited 55 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்