காஸா மீது தீவிர தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் – பரிதாபமாக உயிரிழக்கும் மக்கள்

இஸ்ரேலிய இராணுவம் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
நேற்று நடந்த தாக்குதலில் குறைந்தது 60 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரித்தானியா, கனடா உட்பட 10 நாடுகள் பாலஸ்தீன வட்டாரத்தை ஒரு தனிநாடாக அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
அதனை முன்னிட்டு இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
இம்மாதத் தொடக்கத்திலிருந்து 500,000க்கும் அதிகமானோர் காஸாவைவிட்டு வெளியேறிவிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
காஸாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் குழு அதனை நிராகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 300,000 பேர் வெளியேறிவிட்டதாகவும் இஸ்ரேலிய பிணையாளிகள் உட்பட சுமார் 900,000 இன்னும் காஸாவில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
(Visited 12 times, 1 visits today)