சிரியா பாதுகாப்பு அமைச்சின் மீது இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதல்

சிரியாவின் ஸ்வெய்டா நகரில், சிறுபான்மையான ட்ரூஸ் மதத்தினர் மற்றும் அரபு பழங்குடியினர் இடையே அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது.
இதில் அரபு பழங்குடியினருக்கு ஆதரவாக களமிறங்கிய சிரிய ராணுவம், ட்ரூஸ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இதனால் பலர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாக, இஸ்ரேலில் வசிக்கும் ட்ரூஸ் மதத்தினர், இஸ்ரேல்-சிரியா எல்லையில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து சிரியாவுக்குள் நுழைந்தனர்.
இவர்கள் பெரும்பாலும் இஸ்ரேல் ஆதரவாளர்களாக உள்ளதால், அவர்களுக்கு பாதுகாப்பளிக்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் ராணுவம் சிரியா பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மீது உச்சக்கட்ட வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது இருநாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)