கமேனியை கொல்ல திட்டமிட்டதை ஒப்புக் கொண்ட இஸ்ரேல்

ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம். இதனை அறிந்து கொண்ட அவர், நிலத்துக்கு அடியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கினார்.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதில் வந்தவர்களுடனான தொடர்பையும் அவர் துண்டித்து கொண்டார். இதனால், எங்களது முயற்சி சாத்தியம் இல்லாமல் போனது.
போரின் போது, தீவிரமாக அவரை தேடினோம். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. தலைமையை மாற்றுவதே நோக்கம். கமேனியை கொல்வதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏதும் தேவையில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)