இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு வான் எல்லையை முழுவதுமாக திறந்த ஈரான்

இஸ்ரேலுடன் ஏற்பட்டிருந்த மோதலுக்குப் பிறகு, ஈரான் தனது வான்வழி எல்லையை முழுமையாக மீண்டும் திறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் திகதி தொடங்கிய ஈரான் – இஸ்ரேல் இடையேயான இராணுவ மோதல், 12 நாட்களில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டிருந்த வான்வழி கட்டுப்பாடுகள், படிப்படியாக நீக்கப்பட்டன.
தற்போது, அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஈரான் சிவில்விமானப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, பிராந்தியத்தில் நிலவும் பதட்ட சூழ்நிலை அடியோடு சாந்தமடைந்ததை குறிக்கிறது என்றும், சர்வதேச விமானப் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் முக்கிய கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)