அவசரமாக அமெரிக்கா புறப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல உயர்மட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இறுதி கட்டத்தில் உள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக ராஜ்நாத் சிங் அமெரிக்கா வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வரும் 26ம் திகதி வரை அவர் அமெரிக்காவில் தங்க உள்ளார்.
ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் போது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பயணத்தின் போது இந்திய-அமெரிக்க உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)