கனடாவில் பெண் மருத்துவர்களிடம் தகாத முறையில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி நபர் கைது
கனடாவின்(Canada) மிசிசாகாவில்(Mississauga) உள்ள பல மருத்துவ வசதிகளில் மருத்துவர்கள் உட்பட பெண் ஊழியர்களிடம் அந்தரங்க உறுப்புகளை காட்டிய 25 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய காவல்துறை(Peel Regional Police) தெரிவித்துள்ளது.
பெண் மருத்துவர்களிடமிருந்து தகாத உடல் தொடர்புகளைத் தூண்டும் நோக்கில், மருத்துவப் பிரச்சினைகள் இருப்பதாக நடித்து, வைபவ்(Vaibhav) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், மீண்டும் மீண்டும் மருத்துவமனைகளுக்குச் சென்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் 2025ம் ஆண்டில் பல மாதங்களில் பல இடங்களில் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 4ம் திகதி கைது செய்யப்பட்டுள்ள வைபவ் தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், போலி அடையாளத்தை பயன்படுத்தல், ஆவண திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.





