இந்தியா: மத்தியப் பிரதேசத்தில் பதிவான நிலநடுக்கம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தெற்கு பகுதியில் இன்று இரவு 8.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.6ஆக பதிவாகியுள்ளது.
5 கிலோமீட்டர் ஆழத்துக்கு நிலநடுக்க அதிர்வுகள் இருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தெற்கு பகுதியாக இருந்தாலும், மகாரஷ்டிரத்தின் அமராவதி மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் அருகே நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டுள்ளது.
(Visited 26 times, 1 visits today)