மீண்டும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி 04 கப்பல்கள் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் பயணித்த நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 02 கப்பல்களும் அமெரிக்க போர்க்கப்பல்கள் என்பது சிறப்பு.
இந்த தாக்குதலில் பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலுடன் தொடர்பில் இருந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
இதுவரை, கப்பல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 50க்கும் அதிகமாகும்.