சவுதி அரேபியாவில் பாலத்தின் மீது பேருந்து மோதி விபத்து; 20 மெக்கா யாத்ரீகர்கள் உடல் கருகி பலி
சவுதி அரேபியாவில் புனித நகரமான மெக்காவிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தெற்கு மாகாணமான ஆசிரில் உள்ள பாலத்தில் மோதி கவிழ்ந்து பின் தீப்பிடித்து எரிந்தது.இந்த பயங்கர விபத்தில் கிடைத்துள்ள முதல் கட்ட தகவலின் அடிப்படையில் 20 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 29 […]













