இலங்கையில் நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் – ரணில்!
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மீரிகம முதல் கடவத்தை வரையிலான வீதிப் பகுதி சீனாவின் உதவியுடன் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
குருநாகலிலிருந்து கலகெதர வரையிலான பகுதியும் ஜப்பானின் உதவியுடன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கட்டுகஸ்தோட்டை வரை நீடிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
(Visited 5 times, 1 visits today)