80 வயதில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா
																																		வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா(Khaleda Zia) பிப்ரவரி மாதம் எதிர்பார்க்கப்படும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது அரசியல் கட்சி தெரிவித்துள்ளது.
80 வயதான கலீதா ஜியா,மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார் என்று மூத்த வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர்(Mirza Fakhrul Islam Alamgir) உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், 2008 முதல் பிரித்தானியாவில் வசிக்கும் கலீதா ஜியாவின் 59 வயது மகன் தாரிக் ரஹ்மானும்(Tarique Rahman) தேர்தலில் போட்டியிடுவார் என்று மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தை மூன்று முறை வழிநடத்திய கலீதா ஜியா, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவின்(Sheikh Hasina) அரசாங்கத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டில் 2018ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
        



                        
                            
